மாயா !
என்னோடு உள்ள கிறுக்குத்தனங்களின் பதிவு ...
Wednesday, November 14, 2012
இதயத்தின் காயங்களுக்கு மருந்திட முற்படும் போது எல்லாம் ரணத்திலிருந்து
கசிகின்றது நம் காதல் ..
Friday, September 14, 2012
முக புத்தகம்
முகவரி இல்லாதவருக்கும் புகலிடமாய் ...
நீ மற்றவருக்கு அனுப்பும் பதில்களில்
தொலைந்த உன்னை தேட !!!
Sunday, August 12, 2012
தோள்சாய்ந்து !!!
உன் தோள்
சாயத்தோன்றும்
போதெல்லாம் சாய்ந்து கொண்டுதான் இருக்கிறேன் ..
நமது நினைவுகளின் மேல் !!!
Saturday, August 11, 2012
தடம் !!!
ஈரமாய் இருந்த பொழுது நீ பதித்த கால் தடத்தின் சுவடு
இன்னும்
அழியாமல்
இருக்கின்றது...
இறுகியபின்னும்
இதயத்தில் !!!
Friday, August 10, 2012
நுரை !!!
கடல் எத்தனை வலிமையுள்ளதாய் இருந்தாலும் ...
அலைகள் எத்தனை உயரமாய் நின்றாலும் ...
கரைக்கு ஒதுங்கும் போது
நுறைகளாய் பிறப்பெடுத்து உன் கால் நனைத்து உடைகின்றன ...
நானும் பெண்ணானேன் !!!
நூலிழை!!!
ஒரே ஒரு நூலை மட்டும் மிச்சம் வைத்துள்ளேன்...
அறுத்து விட்டால் பறந்து விடுவாய்...
தொலைந்தும்
விடுவாய் ...
பறந்து போக
ஆசைப்படுகிறாய் ...
போகிறபோக்கில் போகட்டும் என விட்டுவிட முடியவில்லை என்னால் ...
என் சுவாசத்தால்
நிறைத்து இருக்கிறேன் உன்னை ...
- மாயா !
Home
Subscribe to:
Posts (Atom)